காலி முகத்திடலில் மே நாள் பேரணியை நடத்துவதற்கு, கூட்டு எதிரணிக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. சிறிலங்காவில் மே நாள் பேரணிகள் எதிர்வரும் 7ஆம் நாள் நடத்தப்படவுள்ளன. இந்தநிலையில் காலி முகத்திடலில் பேரணியை நடத்த கூட்டு எதிரணி திட்டமிட்டிருந்தது. ஆனால், காலிமுகத்திடலில் கூட்டு எதிரணியின் பேரணிக்கு அரசாங்கம் அனுமதி அளிக்க மறுத்துள்ளதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Post a Comment