வாகரை – பனிச்சங்கேணியில் உள்ள இராணுவ முகாமில் இன்று (09) அதிகாலை 4.10 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், சிறீலங்கா படையினர் ஒருவர் உயிரிழந்துள்ளாரென, வாகரைப் சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில், இராணுவ முகாம் காவலரணில் காவல் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கந்தளாய் – ஜயந்திபுரம் பகுதியைச் சேர்ந்த பி.ஆர்.எம். நளீன் சஞ்சீவ (வயது 34) என்ற வீரரே உயிரிழந்துள்ளார். சடலம், உடற் கூறாய்வுக்காக வாகரை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment