Header Ads

test

தடுப்பு முகாம்கள் குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்கிறது அரசாங்கம்!


போருக்குப் பின்னரான காலப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களை பார்வையிடுவது தொடர்பாக, புதிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு அரசாங்கத்திடம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் யோசனையொன்றை முன்வைத்துள்ளது. சிறைக்கைதிகளை நடத்தும் முறைமையினை தரமானதாக மாற்றியமைக்கவும் சர்வதேச மட்டத்தில் காணப்படுகின்ற சிறைச்சாலை கட்மைப்புக்களுக்கு நிகராக இலங்கையின் சிறைச்சாலை கட்டமைப்பினை மாற்றியமைக்கவும் செஞ்சிலுவை சங்கத்தின் நிபுணர்களின் ஆலோசணைகளை இலங்கை பெற்றுகொள்வது அவசியமாகும். இதனடிப்டையில் சுய சுதந்திரத்தினை இழந்த நபர்களுக்கு விடிவினை ஏற்படுத்துவதற்கான ஒத்துழைப்புகள் மற்றும் மனிதாபிமான செயற்பாடுகள் தொடர்பில், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துடன் குறித்த முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

No comments