Header Ads

test

சிறிலங்காவில் மர்மமான முறையில் காணாமல் போயுள்ள சீனர்


சிறிலங்காவுக்கு வந்த ஒரு சில மணிநேரங்களிலேயே சீன நாட்டவர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவம் என்பன ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஜியாங் டோ என்ற சீனர் மேலும் இரண்டு பேருடன், கடந்த 11ஆம் நாள் இரவு சிறிலங்காவுக்கு வந்திருந்தார். அவர்கள், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை முன்னெடுக்கும் நிறுவனத்தின் கட்டுமானப் பகுதிக்கு கடந்த 12ஆம் நாள் அதிகாலை சென்றிருந்தனர். தெனியாய காட்டுப் பகுதியில் சுற்றித்திரிந்த சீனர், அன்று மாலை முகாமுக்குத் திரும்பவில்லை. இதுதொடர்பாக சிறிலங்கா காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டு தேடுதல்கள் நடத்தப்பட்டன. சிறிலங்கா இராணுவத்தினரும் உதவிக்கு அழைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது. தேடுதல்களின் போது, காணாமல் போன சீனரின் அலைபேசி, மேற்சட்டை மற்றும் காலணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காணாமல் போயுள்ள சீனரைக் கண்டுபிடிக்கும் தேடுதல்களை சிறிலங்கா இராணுவம்,க காவல்துறை என்பன தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

No comments