வட தமிழீழம், யாழ்ப்பாணம் ஊடகவிலயாளரின் துணிச்சல்மிகு செயலினால் இனத்துவேசம் பேசி பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முற்பட்ட ரயில்வே பணியாளர் ஒருவருக்கு எதிராக சிறிலங்கா ரீதியில் எதிர்ப்பு வலுத்து வருகின்றது.
யாழ்ப்பாணம் வலம்புரிப் பத்திரிகையில் ஊடகவியலாளராகப் பணியாற்றும் உதயராசா சாளின் நேற்று முன்தினம் (07) காலை 06.30 மணி புகையிரத்தில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துள்ளார். புகையிரதம் வவுனியாவை வந்தடைந்தபோது பிரித்தானியாவை சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் வவுனியா புகையிரத நிலையத்தில் இருந்து ஏறியுள்ளார். இதன் போது குறித்த புகையிரதத்தில் பெருமளவில் சன நடமாட்டம் இல்லாமையால் இதனை பயன்படுத்தி கொண்ட புகையிரதத்தில் பணியாற்றுகின்ற சிட்டை பரீட்சிக்கும் ஊழியர் ஒருவர், குறித்த பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார். இதனை அவதானித்த அங்கு நின்றவர்கள் குறித்த ஊழியரிடம் சென்று ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என கேட்ட போது, அவ்வாறு கேட்டவர்களை தாக்க முயற்சித்தார். மேலும் தமிழர்கள் கீழ்த்தரமானவர்கள் போன்று தகாத வார்த்தைகளை அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார். இதன் போது புகையிரத்தில் பயணித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர் நியாயம் கேட்க முற்பட்டபோது குறித்த ஊழியர் அவரையும் தாக்க முயற்சித்துள்ளார். இந்த சம்பவம் சாவகச்சேரி புகையிரத நிலையத்தை அண்மித்த போது நடந்து கொண்டிருந்தது. இதன் போது நீங்கள் தமிழ் என்றால் என்னை ஒன்றும் செய்ய முடியாது, சிறிலங்கா காவல்துறையினராலும் யாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. இங்கு நான் தான் பெரியவன் என்று மிரட்டும் தொனியில் குறித்த ஊழியர் அனைவரையும் மிரட்டியிருக்கிறார். இந்த சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருந்த போது குறித்த ரயிலில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் எவரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருக்காத நிலையில் புகையிரதம் யாழ்.பிரதான புகையிரத நிலையத்தை வந்ததடைந்ததும், அம்ப்வம் தொடர்பில் யாழ்.புகையிரத அதிபருக்கு குறித்த பெண்ணால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து செய்தியாகவும் ரூவிற்றர் ஊடாகவும் குறித்த ஊடகவியலாளர் சம்பவத்தை அம்பலப்படுத்திய நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட அமைப்புக்கள் களத்தில் இறங்க கொழும்பின் உயர்மட்ட அதிகாரிகள் அமைச்சர்கள் என விடயம் நாடுமுழுவதும் பரவிடத் தொடங்கியது. இதனையடுத்து நேற்று (08) குறித்த புகியிரத பணியாளர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டார். இந்நிலையில் அவரைப் பணி நீக்கம் செய்வதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
Post a Comment