நன்றி சொல்ல வார்த்தை இல்லை எமக்கு!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நோக்கம் புரிந்து ஒத்துழைத்து முன்னெடுத்த அனைவரிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த போராளிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழரின் தேசிய விடுதலைப்போராட்டத்தில் நீண்டகாலம் பங்களித்த பாலிப்போடி சின்னத்துரை (யோகன்-பாதர்-மட்டக்களப்பு, முத்துக்குமார் மனோகர் (பசீர்-காக்கா-யாழ்ப்பாணம்), ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன் - திருமலை) ஆகிய மூவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தமது நன்றியறிதலை தெரிவித்துள்ளனர்.
முன்னதாக யாழ்.ஊடக அமையத்தில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்கள் மூவரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்க அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment