சுமந்திரனின் பௌத்த விரோத அறிவிப்பு: ஜனாதிபதி, பிரதமர் விளக்கம் கூறுங்கள்- சோபித்த தேரர்
வடக்கு, கிழக்கு பகுதிகளில் விகாரை அமைப்பதை தடை செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் நிலைப்பாட்டை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என தென்னிலங்கையின் பிரதான சங்க தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரின் இந்த அறிவிப்பு, அரசியல் யாப்புக்கு மாற்றமானது மட்டுமல்லாது முறைகேடான ஒன்றாகவும் உள்ளது. இதனூடாக மத பேதம் ஏற்படுவதற்கு வழிவகுப்பதாகவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அறிவிப்பு செய்த சுமந்திரனின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட வேண்டும் என்பதோடு, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
சுமந்திரன் எம்.பி.யிற்கு பௌத்த விகாரைகள் அமைப்பது மாத்திரமா பிரச்சினைக்குரியது, வேறு சமயஸ்தலங்களை அமைப்பது அவருக்கு பிரச்சினையில்லையா? எனவும் தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு கிழக்குப் பகுதிகள் எங்கும் பௌத்த தளங்கள் சிதறிக் கிடக்கின்ற நிலையில், சுமந்திரன் இதுபோன்ற அறிவிப்புக்களை விடுப்பது யாருடைய அதிகாரத்தை பெற்றுக் கொண்டு என்று கேட்க வேண்டியுள்ளது. இவரின் அறிவிப்பு உண்மையிலேயே கொடூரமான ஒன்று எனவும் தேரர் வர்ணித்துள்ளார்

Post a Comment