முன்னோக்கி தவராசா:போர்க்குற்றத்தில் அனந்தி!
வடமாகாணசபையின் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா முன்னோக்கி நகர்வோம் எனும் பெயரில் வேலைத்திட்டமொன்றை இன்று ஆரம்பித்துள்ளார்.அவருடன் காலைக்கதிர் பத்திரிகை ஆசிரியர் ந.வித்தியாதரன் மற்றும் கோத்தபாயவின் பினாமியென சொல்லப்படும் குகநாதன் என பலரும் ஒன்றிணைந்துள்ளனர்.
இந்திய அரசுடன் தற்போது நெருங்கிய உறவை பேணிவரும் சி.தவராசா தனது அண்மைய டெல்லி பயணத்தின் பின்னர் டெல்லி புகழ்பாடுவதை பகிரங்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் தன்னை சமூக செயற்பாட்டில் அக்கறையுள்ளவராக காட்டிக்கொள்வதையும் அவர் கைவிடுவதில்லை.
வடமாகாணசபையின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில் அரசியல்வாதிகள் பலரும் மீண்டும் மக்களை தேடிவரத்தொடங்கியுள்ளனர்.
இதனால் இப்போது மக்களில் அக்கறை கொண்டுள்ளதாக காண்பிக்கவும் அவர்கள் முனைப்பு காட்டிவருகின்றார்.
அவ்வகையில் சி.தவராசா முன்னோக்கி நகரும் வேலைத்திட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளார்.
அடுத்த மாகாணசபை கனவிலிருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் உள்ளிட்ட பலரும் நிகழ்விற்கு வருகை தந்திருந்தனர்.
இதனிடையே மீண்டும் போர்க்குற்ற சீவியத்தை மற்றொரு அமைச்சரான அனந்தி சசிதரன் கையிலெடுத்துள்ளார்.
இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களை தனது அமைச்சிற்கு அழைத்து காணொலி மூலம் உரையாட வைக்கும் நாடகத்தை அவர் அரங்கேற்றியிருந்தார்.
Post a Comment