Header Ads

test

பிரபல நாவலாசிரியர் பாலகுமாரன் காலமானார்!


பிரபல நாவலாசிரியர் பாலகுமாரன், உடல்நலக் குறைவின்றி சென்னையில் இன்று (15ந் தேதி) காலமானார். அவருக்கு வயது 71. எழுத்துலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். 23 படங்களுக்கு திரைக்கதை – வசனம் எழுதியவர். உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் வாசகர்களை கோடிக்கணக்கான வாசகர்களைத் தக்க வைத்திருக்கும் எழுத்தாளர். ‘‘இரும்புக்குதிரைகள்’’ நாவல் மூலம் தமிழ் இலக்கிய ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்ற நாவலாசிரியர். பிரபல மாத, வார பத்திரிக்கைகளில் சிறுகதைகளை எழுதி மக்களிடையே நன்கு பரிட்சையமான அவர், கமல்ஹாசன் நடித்த நாயகன் பிரபுதேவா நடித்த காதலன் (காதலன் படத்துக்கு சிறந்த வசனகர்த்தா விருது பெற்றவர்) உள்பட 23-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். சில மாதங்களாக பாலகுமாரன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரின் உயிர் இன்று பிற்பகல் பிரிந்தது. பாலகுமாரனின் மறைவுக்கு எழுத்துலகம் மற்றும் கலையுலகத்தை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வாழக்கைக் குறிப்பு தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி வட்டத்தில் உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் தமிழாசிரியர் சுலோசனா என்பவருக்கு மகனாகப் பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர், தட்டச்சும் – சுருக்கெழுத்தும் (டைப்ரைட்டிங் – ஷார்ட்ஹாண்ட்) கற்று தனியார் நிறுவனத்தில் 1969ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் டிராக்டர் கம்பெனியில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதி உள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும், கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார். விருதுகள் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ட்ரஸ்ட் விருது (இரும்புக் குதிரைகள்), இலக்கியச் சிந்தனை விருது (மெர்க்குரிப் பூக்கள்), தமிழ்நாட்டு மாநில விருது (சுகஜீவனம் – சிறுகதை தொகுப்பு) கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருப்பவர்.

No comments