Header Ads

test

போலந்து பாதுகாப்பு ஆலோசகர் இலங்கையில்!

போலந்து தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் ஸ்லாவோமிர் கொல்டுன் மற்றும் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று அண்மையில் கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இலங்கை கடற்படைக்கு வழங்கப்படும் ஒத்துழைப்புக்களை தொடர்பில் கடற்படை தளபதி போலந்து பாதுகாப்பு ஆலோசகருக்கு தனது நன்றிகளையும் தெரிவித்தார்.

சந்திப்பின் இறுதியில் இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments