தண்ணீர் வார்த்த இலங்கை இராணுவம்!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கெடுத்துவிட்டு வீடு திரும்பிய தமிழ் மக்களிற்கு சிங்கள இராணுவம் குளிர்பானம் கெர்டுத்து குளிர்விக்க முற்பட்டது.
முல்லைதீவு –புதுக்குடியிருப்பு வீதியில் படைமுகாம் ஒன்றின் முன்னதாக அமைக்கப்பட்டிருந்த விசேட பந்தலில் இராணுவம் காலஞ்சென்ற தமிழ் மக்களை குளிர்த்திக்கும் வகையில் இதனை செய்வதாக பெயர்பலகையும் பொருத்தப்பட்டிருந்தது.
எனினும் இதனை பொருட்படுத்தாது தமிழ் மக்கள் பயணிக்க இராணுவம் பின்னராக பலாத்காரமாக வாகனங்களை வழிமறித்து குளிர்பானம் வழங்க முற்பட்டது.
உண்மையில் இது முள்ளிவாய்க்காலில் இனஅழிப்பிற்குள்ளான தமிழ் மக்களிற்காகவா அல்லது போர் வெற்றிக்காகவாவென பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதனால் பல தடவைகள் இளைஞர்களிற்கும் இராணுவத்தினருக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
இதனிடையே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதியிலும் வீதியெங்கும் பல்வேறு பொது அமைப்புக்கள் தாகசாந்தி நிலையங்களையும் உணவுச்சாலைகளையும் அமைத்து இலவசமாக மக்களிற்கு அள்ளி அள்ளி வழங்கியவண்ணமிருந்தனர்.
Post a Comment