Header Ads

test

ராஜித சேனாரத்னவை பதவி விலகக் கோருகிறார் கம்மன்பில!


சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்ட கருத்துக்களை அரசாங்கத்தின் கருத்துகளாக ஏற்றுக்கொள்ள முடியாது எனின், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிவிதுறு ஹெல உறுமயவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். "அமைச்சர் ராஜித சேனாரத்ன தமிழின படுகொலையை நினைவு கூறப்படுது நியாயமானது என்றும், பிரபாகரன் ‘மஹாத்மயா’ என்று குறிப்பிட்டமையும் அரசாங்கத்தின் கருத்தாக ஏற்றுகொள்ளப்படமாட்டாது என அமைச்சர்கள் கருத்து வெளியிட ஆரம்பித்துள்ளனர். அமைச்சரவை பேச்சாளர் அரசாங்கத்தின் தகவல்களை உத்தியோகபூர்வமாக அறிவிப்பவர் எனவே அவரின் கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாடு இல்லை என்று கூறுவதற்கான அதிகாரம் ஏனைய அமைச்சர்களுக்கு இல்லை. ஜனாதிபதி, பிரதமருக்கு அந்த அதிகாரம் உள்ளது ஆனால் அவர்கள் அந்த கருத்தை ஏற்றுகொள்ளும் முன்னர் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பதவி விலக்க வேண்டும். இல்லாவிடின் அவரின் கருத்தையே மக்கள் ஏற்றுக்கொள்வர்" என்றார்.

No comments