வட மாகணத்தில் கடமையாற்றுகின்ற அரச மருத்துவர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவுகள் பல மாதங்களாக வழங்கப்படாத நிலையில், குறித்த கொடுப்பனவுகளை வழங்க கோரி வடமாகாணத்தில் உள்ள அரச மருத்துவர்கள் இன்று ஒரு நாள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் கடமையாற்றுகின்ற மருத்துவர்களும் , தமது மேலதிக நேரக்கொடுப்பணவை வழங்க கோரி காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைக்குப் பல்வேறு தேவைகளுக்காக தூர இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment