Header Ads

test

முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் கொலைப் பங்காளிகள்!

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு முன்னாள் கொலைப் பங்காளிகளாக இருந்த ஈ.பி.டிபி முன்னாள் உறுப்பினரும் தற்போது இன்று கிளிநொச்சியில் மாவட்ட சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தலைமையில்  விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை மாலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் பிரதான சுடர் ஏற்றப்பட்டு பின்னர் ஆலயத்தில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக சுடர்கள் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சந்திரகுமார், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ஊடகங்கங்களுக்குத் கருத்துத் தொிவித்த சந்திரகுமார்:-

இறுதி யுத்தத்தினால் உயிரிழந்தவர்களிற்கு இன்று நாம் அஞ்சலி செலுத்தினோம். கடந்த வருடங்களை போன்று இன்றும் நாம் அவர்களின் ஆத்ம சாந்திக்காக விளக்கேற்றி வழிபாட்டிலும் பங்குகொண்டோம் என அவர் தெரிவித்தார்.







No comments