தென்தமிழீழம், திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெகிவத்த பிரதேசம் கங்குவேலி கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மூதூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மூதூர் இரால்குழி பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் திருமணம் முடித்த பின்னர் தெகிவத்த பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார். குறித்த நபர் தனது மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்நிலையில், தற்கொலை செய்து கொண்டவர், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கடந்த 2004ஆம் ஆண்டில் விலகி, அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதுடன் முன்னாள் போராளிகளின் தொடர் சாவுகளில் இதுவும் ஒன்றா என சந்தேகமும் நிலவுகிறது
Post a Comment