Header Ads

test

பாரிஸ் அடுக்குமாடியில் தொங்கிய குழந்தையைக் காப்பாற்றி இளைஞன்

பாரிசில் அடுக்குமாடியின் பல்கனியில் தொங்கிய குழந்தையைக் காப்பாற்றிய அகதி அந்தஸ்து பெற்ற மாலி நாட்டவரான இளைஞன். அவருக்கு அரசியல் வாதிகள் தொடக்கம் பொதுமக்கள் வரை பாராட்டுக்களை குவித்துக்கொண்டிருக்கின்றனர். அவரை நிஜ ஸ்பைடமான் என அழைக்கத் தொடங்கியுள்ளனர்.
பாரிசில் வடக்கு பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தின், 4 வது மாடியில் கட்டிடத்தை பிடித்தபடி 4 வயது குழந்தை அழுதபடி தொங்கிக் கொண்டிருந்தது.

அதை கீழே விழாமல் பக்கத்து வீட்டில் தங்கியிருக்கும் நபர் பிடித்துக் கொண்டிருந்தார். இதை கீழே நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களில் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை.

ஆனால் எந்தவித தயக்கமும் இன்றி கசாமா  என்ற இளைஞர் "ஸ்பைடர் மேன்" பாணியில் கட்டிடத்தின் முன்புறத்தில் சுவரை பிடித்தபடி சிலந்தி பூச்சி போன்று மேலே ஏறி, தொங்கி கொண்டிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டு காப்பாற்றினார்.

No comments