இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையால் உள்நாட்டிலுள்ள தொழில் வாய்ப்புக்கள் எந்தவகையிலும் பாதிக்கப்பட மாட்டாதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் எமது நாட்டிலுள்ள தொழில் வாய்ப்புகள் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட மாட்டாதென்றும் பிரதமர் நேற்று கூறியுள்ளார். இலங்கை பொறியியலாளர் நிறுவனம் மற்றும் இலங்கை கட்டட நிர்மாண வடிவமைப்பு நிறுவன பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (18) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment