Header Ads

test

வவுனியா மதியம் வரை பூட்டு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நாளை மதியத்திற்கு பின்னரே வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமென வர்த்தகர் சங்கம் அறிவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் தினம் நாளை அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் வடமாகாண முதலமைச்சர் வர்த்தக நிலையங்களை மூடி துக்கதினமாக அனுஸ்டிக்குமாறு கோரிக்கைவிடுத்திருந்தார். இதற்கு அமைவாக வவுனியா வர்த்தகர்களை மதியம் 12.00 மணி வரை வர்த்தக நிலையங்களை மூடுமாறு வவுனியா வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக வர்த்தக சங்கம் தெரிவித்ததாவது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 09ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளதால் அனைத்து வர்த்தக நிலையங்களையும் அரை நாள் மூடுமாறு வடமாகாண முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கிணங்க அனைத்து வவுனியா வர்த்தகர்களையும் மதியம் 12.00 மணிக்கு பின்னர் தமது வர்த்தக நிலையங்களை திறந்து வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.

No comments