Header Ads

test

பட்டியல் பற்றிய தகவலை விரைவில் அறியத்தருவோம்- ஜனாதிபதி செயலாளர்


அர்ஜுன் அலோசியசிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டவர்கள் 118 பேரின் பெயர் பட்டியலை மறைத்து வைத்திருப்பதற்கு தனக்கு எந்தவித தேவையும் இல்லையெனவும், அப்படியானவர்கள் இருக்கின்றார்களா என கண்டறிந்து அவசரமாக அறியத்தருவதாகவும் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணாந்து தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான பெயர்ப் பட்டியலை தன்னிடம் மறைத்து வைத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ள கருத்தை நான் ஊடகங்களில் கண்டேன். நான் இது தொடர்பில் தயாசிறியிடம் கேட்டேன். இந்தப் பெயர்ப் பட்டியல் செயலகத்தில் இருப்பது போன்று இருக்கின்றது என்று தான் தெரிவித்தேன். அது தொடர்பில் எதுவும் தனக்குத் தெரியாது என்றுதான் அவர் என்னிடம் கூறினார் எனவும் ஜனாதிபதி செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் காரியாலயத்திலிருந்து வெளியேறிச் சென்றவர்களும் உள்ளனர். சிலபோது அந்தப் பெயர்ப் பட்டியலை நாடாவில் பதிவு செய்து தனியாக பாதுகாத்திருக்கவும் இடமிருக்கின்றது. தயாசிறி கூறிய கருத்தில் உண்மைத் தன்மையை கண்டறிய வேண்டும். இது குறித்து கண்டறிந்து மிக விரைவில் ஊடகங்கள் ஊடாக அறியத்தருகின்றேன் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்

No comments