நேருக்கு நேர்:மனோவிற்கு சிவாஜி சவால்!
இலங்கை அரசின் தமிழ் அமைச்சரான மனோகணேசனிற்கு துணிவிருந்தால் தன்னுடன் விவாதத்திற்கு வருமாறு வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் சவால் விடுத்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் உங்களை பற்றி பேசுவது அரசியல் நாகரிகம் இல்லை. நீங்கள் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களில் ஒருவராக உள்ளீர்கள். உங்களை விமர்சித்தால் , அது மலையக தமிழர்களை புண்படுத்தும் என பேசாது விடுகிறேன்.
தொடர்ந்து என்னை நீங்கள் சீண்டினால் நான் தொடர்ந்து பொறுமை காக்க மாட்டேன்.
மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது கூட இனப்படுகொலையின் அம்சம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்து விட்டீர்கள் , ஏணிகளாக இருந்து உங்களை ஏற்றிவிட்ட பிரபாகனேசன் , வேலணை வேணியன் இப்பொழுது எங்கே ?
என் கருத்திற்கு எதிர்க்கருத்து கூறுவது என்றால் , அரசியல் நாகரிகத்தை பேணி பேசுங்கள். இல்லை என்றால் நானும் , உங்கள் கடந்த காலத்தை தூசு தட்டுவேன் எனவும் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளை நினைவுகூர்வது மற்றும் சர்வதேச விசாரணைகள் தொடர்பில் மனோகணேசன் தெரிவித்த கருத்துக்களிற்கு கே.சிவாஜிலிங்கம் விமர்சனங்களை முள்வைத்திருந்தார்.
இதனால் சீற்றமுற்றிருந்த மனோகணேசன் கே.சிவாஜிலிங்கத்தை கோமாளியென காட்டமான கருத்துக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment