இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியை சந்தித்த மனித உரிமைகள் ஆணையாளர்
ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்.ஏ. அஹீஸை, மனித உரிமைகள் ஆணையாளர் நேற்று சந்தித்துள்ளார்.
இதன்போதே குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பணிமனையின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், நல்லிணக்கம், பாதுகாப்பு, மனித உரிமைகளை ஊக்குவித்தல், சட்டத்தின் ஆட்சி என்பன குறித்து இருவருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், பிராந்திய அபிவிருத்தி குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக ஜெனிவா பணிமனை தெரிவித்துள்ளது
Post a Comment