Header Ads

test

கூட்டமைப்பும் குமுதினி படுகொலைக்கு அஞ்சலித்தது!


கொலைப்பங்காளிகள் படுகொலையானவர்களிற்கு காலை ஈபிடிபி அஞ்சலி செலுத்த மாலை கூட்டமைப்பு அஞ்சலி செலுத்துள்ளது.நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள குமுதினிப் படகு படுகொலை நினைவுத்தூபிக்கு கூட்டமைப்பு அஞ்சலி செலுத்தியுள்ளது.


1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து  64 பயணிகளுடன் குமுதினி படகு தனது பயணத்தை வழமை போல ஆரம்பித்தது. படகு அரை மணி நேரம் தனது பயணத்தை மேற்கொண்டிருந்தவேளை இலங்கை கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என 36 பேரை வெட்டி படுகொலை செய்யப்பட்ட துயரம் நிறைந்த 33 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.


இதனை நினைவு கூரும் முகமாக நெடுந்தீவு பிரதேசசபை மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களது பங்கெடுப்பில் நினைவேந்தல் நடைபெற்றிருந்தது.

குமுதினிப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்களான விந்தன் கனகரட்ணம் மற்றும் கே.சிவாஜிலிங்கமென பலரும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர்.


இதனிடையே கடந்த ஒரு வாரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை இன்று நெடுந்தீவில் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

No comments