காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அன்னையர் தினமான இன்று கவனயீர்ப்பு போராட்டம்
வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விஜய் நற்பணிமன்ற இளைஞர்களின் பங்களிப்புடன் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து பசார் வீதி வழியாக சென்ற கவனயீர்ப்பு ஊர்வலம், ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து அங்கிருந்து கண்டி வீதிவழியாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட தளத்தை வந்தடைந்தது. இதன்பின் மனிதசங்கிலிப் போராட்டம் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், இன்று உலக அன்னையர் தினம். எல்லா அன்னையர்களுக்கும் தமது பிள்ளைகள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள். ஆனால் நாம் எமது பிள்ளைகளை தேடிக் கொண்டிருக்கின்றோம். எமக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை என கண்ணீர்விட்டு அழுதனர். விஜய் நற்பணி மன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில், இந்த தாய்மாரின் வேதனை புரிகிறது. அன்னையர் தினத்தில் நாம் எல்லாம் ஒன்று கூடி இந்த தாயள்மாரின் போராட்டத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என குரல் கொடுத்துள்ளோம். இவர்களுக்கு அவர்களது பிள்ளைகள் கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். இதேவேளை, போதையற்ற தேசத்தை கட்டியெழுப்போம் எனவும் இதன்போது அன்னையர்கள் முன்னிலையில் இளைஞர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
Post a Comment