Header Ads

test

வன்னிவிளாங்குளத்தில் பாலத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்! - இளைஞன் பலி

முல்லைத்தீவு- வன்னிவிளாங்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மல்லாவியில் இருந்து மாங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் பயணித்தனர். 

இதன்போது வன்னிவிளாங்குளம் வீதி வளைவில் பாலத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
20 வயதான முருகன் நளின் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments