கட்டம் கட்டமாக தன் புனிதத்தினை சீர்குலைத்து வரும் வரலாற்று மண் புதுக்குடியிருப்பு
புதுக்குடியிருப்பு என்கின்ற மண்ணிற்கென தனிப்பெரும் சிறப்புண்டு . வரலாற்றுப்போர் நிகழ்ந்தகாலங்களில் எல்லாம் தமிழர்சேனையினையும் , தமிழ்மக்களினையும் தாங்கி விடுதலைப்போரினை வீச்சாக்கிய மண்ணும் இதுதான் , விடுதலைப்போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மூச்சு நின்ற மண்ணும் இதுதான் ...
இப்படிப்பட்ட மண்ணில் புகழ்மிக்கபாடசாலை மத்தியகல்லூரி இப்பாடசாலைகூட வரலாற்றோடு ஒன்றிய பாடசாலைதான் . இப்பாடசாலைக்கும் கிளிநொச்சிமாவட்டத்தின் கிளி மகாவித்தியாலயத்திற்கும் இடையில் விடுதலைப்புலிகளின்காலத்தில் உயிர்நீத்த வெளிநாட்டுத்தொடர்பக பொறுப்பாளர்களில் ஒருவரான லெப்டினன் கேணல் கலையழகன் ஞாபகார்த்தமாக "வன்னியின் பெருஞ்சமர்" எனும் கடினப்பந்து துடுப்பாட்டப்போட்டி நிகழ்த்தப்பட்டு வந்தது வளமை .
வளமையாக இப்போட்டியானது ஏப்ரல் மாத இறுதிக்குள் நிகழ்த்தப்பட்டே வந்தது ஆனால் இம்முறை தமிழர்களின் இனவழிப்பு வாரத்திற்கு இருபாடசாலைகளும் திட்டமிட்டு அதுகும் கலையழகனின் தாயார் உயிர்நீத்துள்ளநிலையிலும் பொருட்படுத்தாது தமிழ்மக்களின் உணர்வுகளைச்சிதைக்கும் விதமாக செயற்படுவதாக ஆர்வலர்களால் குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் எதிர்வரும் 12 ஆம் திகதி நிகழ்த்த திட்டமிட்டிருப்பது வேதனை ...
இருபாடசாலைகளையும் சார்ந்த பல மாணவர்கள் , ஆசிரியர்கள் பலியாகியிருந்தும் கூட இருநிர்வாகமும் கருத்திலெடுக்காமை கவலைக்குரியது ..
கற்றுக்கொடுக்கவேண்டிய கல்லூரிகளே இப்படி கட்டுக்கடங்காமல் செயற்படுவதாக பலரும் அதிருப்தியடைந்துள்ளார்கள் ...
புதுக்குடியிருப்பைப்பொறுத்தவரையில் இவ்வாறான கேளிக்கை நிகழ்வுகளை மேமாதம் போன்ற புனித நாட்களில் நிகழ்த்துவதனை வளமையாக்கியுளார்கள் அப்பிரதேசத்து பொது அமைப்புக்கள் , நிறுவனத்தினர் ...
ஆரம்பத்தில் வன்னிக்குறோஸ் எனும் நிறுவனத்தினர் தென்னிந்தியக்கலைஞரான நாசாரினை அழைத்துவந்து கலை வளர்ப்பதாகக்கூறி மக்கள் உணர்வினை களங்கப்படுத்தினர் ..
கடந்தவருடம் உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டியினை நிகழ்த்தி மக்கள் உணர்வோடு விளையாடினர் ...
இம்முறை மத்தியகல்லூரியின் நிர்வாகமும் தனது பங்கிற்கு அசிங்கப்படுத்தலுக்காக கிளி மகாவித்தியாலயத்தோடு கைகோர்த்துள்ளமை கடந்தகாலத்தில் இம்மண் அள்ளி வளங்கிய அளப்பெரிய சேவைகளினையும் புனிதங்களினையும் களங்கப்படுத்துவதாக அமைந்துள்ளதாக மக்கள் கருதுகின்றனர் .
புலிக்குடியிருப்பாக இருந்த மண்ணின் புகழுக்கும் ,பண்பிற்கும் குந்தகம் விளைவிப்பது கடந்துவந்த வரலாற்றிற்கழகல்ல என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் ....
Post a Comment