Header Ads

test

பதுளை தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் சார்பில் இன்று அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்


பதுளை மகளிர் தமிழ் வித்தியாலயத்தின் அதிபரை முழந்தாழிடச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் இன்று அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கம் இந்த மனுவை தாக்கல் செய்யவுள்ளது.

விசாரணைகள் நடத்தப்படுவதாக கூறப்பட்டாலும் அந்த விசாரணைகள் எவையும் நிறைவு செய்யப்படவில்லை என  சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

இந்த நிலையிலேயே இன்றைய தினம் அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்<

No comments