Header Ads

test

ஹோமகம – தியகம பகுதியில் விவசாய தொழிநுட்ப பிரிவொன்றை மூடுவதற்கான தீர்மானம்?


ஹோமகம – தியகம பகுதியில் விவசாய தொழிநுட்ப பிரிவொன்றை மூடுவதற்கான தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை விவசாய ஆலோசனையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த சங்கத்தின் தலைவர் ஏ.என் உதயசிறி இதனை தெரிவித்துள்ளார்.

வேதனம் உரிய முறையில் வழங்கப்படாமை தொடர்பான பிரச்சினையொன்றை முன் நிறுத்தி விவசாய திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், ஹோமகம – தியகம பகுதியில் உள்ள குறித்த விவசாய ஆய்வகத்தை மூடுவதற்கான எந்த தீர்மானமும் இல்லையென பிரதி விவசாய அமைச்சர் வசந்த அலுவிஹாரே தெரிவித்துள்ளார்.

No comments