Header Ads

test

ஐ.நாவின் கொள்கைகளுடன் சிறிலங்கா இணங்க வேண்டும் – ஐ.நா பேச்சாளர்


ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் சிறிலங்கா தனது படைகளை ஈடுபடுத்துவதற்கு, ஐ.நாவின் கொள்கைகளுடன் இணங்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவின் மனித உரிமை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படாமல், 49 சிறிலங்கா படையினர் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக லெபனானுக்கு அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “ஐ.நாவின் கொள்கைகளுக்கு அமைய, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆய்வு நடைமுறைகளை உறுதிப்படுத்துவதில், சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து ஐ.நா பணியாற்றுகிறது. சிறிலங்காவில் இருந்து, மேலதிக படைப்பிரிவுகள் நிறுத்தப்படும் போது, ஐ.நாவின் இத்தகைய ஏற்பாடுகளுடன், இணங்கிப் போக வேண்டிய தேவை உள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments