பருத்தித்துறை– பொன்னாலை வீதியை காணோம்?
இலங்கை அரசு பருத்தித்துறை – பொன்னாலை வீதியினை விடுவித்துவிட்டதாக பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ள போதும் காங்கேசன்துறை சந்தியில் இருந்து கீரிமலை வரையான பகுதியை விடுவிக்காதேயிருந்துவருவதாக வடமாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
பருத்தித்துறை – மயிலிட்டி ஊடான பொன்னாலை வீதி ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
காலை 6 மணி தொடக்கம் மாலை 7 மணி வரை இந்த வீதியை மக்கள் பயன்படுத்த முடியும் என அன்றைய தினம் அறிவிக்கப்பட்டது.
எனினும், இந்த வீதியின் காங்கேசன்துறை சந்தியில் இருந்து கீரிமலை வரையான பகுதி விடுவிக்கப்படாதேயுள்ளது.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை,துறைமுகம் ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கட்டிய மாளிகை உள்ளிட்ட பாரிய கடற்படை தளம் இப்பகுதியிலுள்ளது.
காங்கேசன்துறை சந்தியில் இருந்து கீரிமலை வரையான பகுதி மற்றும் தமது காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வடக்கு முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Post a Comment