அரசியலில் நிரந்தர எதிரிகள் என்று எவரும் இல்லை. எனவே, மகிந்த ராஜபக்சவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது சாத்தியமே என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். “கூட்டு அரசாங்கத்தை வெளியேறுவதையே அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் விரும்புகிறார். அதற்கான நாளை தீர்மானிக்குமாறு அவர் மத்திய குழுவிடம் கேட்டுள்ளார். எதிர்க்கட்சியில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே. நாற்காலி அல்லது வெற்றிலை சின்னத்தின் கீழ் அனைவரும் ஒன்றிணைந்து போட்டியிட முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. எல்லோரும் ஒற்றுமையாக நாட்டை பற்றி சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment