நாளை இரணைதீவு செல்கின்றார் வடக்கு முதலமைச்சர்!
வடமாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குழு நாளை திங்கட்கிழமை இரணைதீவு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இரணைதீவு மக்களது போராட்டம் தொடர்கின்ற நிலையில் முதலமைச்சர் நேரடியாக நாளை தனது அமைச்சர்கள் சகிதம் இரணைதீவு செல்லவுள்ளார்.
கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது சொந்தமண்ணை விடுவிக்க கோரி கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இடம்பெயர்ந்து வாழ்ந்துவருகின்ற இரணை மாதா நகரில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.இந்நிலையில் தமது போராட்டத்தை கண்டுகொள்ளாத அரச இயந்திரத்திற்கு எதிராக அம்மக்கள் நேரடியாக கடல்வழியாக தமது சொந்த மண்ணிற்கு திரும்பி அங்குள்ள தேவாலயத்தில் போராட்டத்தை தொடர்கின்றனர்.
தமது போராட்டத்திற்கு முதலமைச்சர் ஆதரவு தெரிவித்துவருகின்ற போதும் நேரடியாக வருகை தரவில்லையென்ற கருத்துக்கள் மக்களால் முன்வைக்கப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் நாளை திங்கட்கிழமை முதலமைச்சர் நேரடியாக இரணைதீவு செல்லவுள்ளார்.
Post a Comment