Header Ads

test

மத்திய குழுக் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை


நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இன்று இடம்பெறவுள்ளது.
 
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூல வரைவு யோசனை உள்ளிட்ட சமகால அரசியல் நிலைமைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.
 
இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
 
இதன்போது, கட்சியின் புதிய அதிகாரிகள் குழு தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

No comments