Header Ads

test

வழிப்பறி கொள்ளையர்களிடமிருந்து தங்கச் சங்கலியைப் பாதுகாத்த பெண்!

வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்து 3 தங்கச் சங்கிலியை சாதுரியமாக பாதுகாத்துக் கொண்ட குடும்பப்பெண் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் அச்சுவேலி தெற்கு காளி கோயிலுக்கு அருகில் பாடசாலை வீதியில் நடைபெற்றது.

வீட்டிற்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த பெண்னின் சங்கிலியை அறுப்பதற்கு மோட்டார் சைக்கிளில் முகத்தைத் துணியால் மூடிக்கட்டிய நிலையில் இருவர் வருவதை அந்த பெண் அவதானித்துள்ளார்.

குறித்த பெண் சங்கிலியைக் களற்றி வீதியோரத்தில் இருந்த வீட்டு முற்றத்தில் வீசி எறிந்துவிட்டார். பின்னர் சங்கிலியை எடுத்துக் கொண்டு சென்றார்.

அச்சுவேலி பாடசாலை வீதியில் இதுவரை ஐந்துக்கு மேற்பட்ட வழிப்பறிச் சங்கிலி அறுப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

அண்மையில் அச்சுவேலி தெற்கில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆசிரியையின் மூன்று பவுண் சங்கிலி மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தவர்களினால் அறுத்துக்கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

No comments