Header Ads

test

சத்தியலிங்கம் சத்தியமாக சுற்றவாளியாம்?

வடமாகாணசபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குற்றமற்றவர் அவர் மீது சபையில் எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லையென தெரிவித்து அவரிற்கு வெள்ளையடிக்க அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மும்முரம் காட்டியமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. 

வடமாகாணசபையின் 122வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது 120 அமர்வில் முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம் கூறிய கருத்துக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னே ஸ்வரன் பதில் வழங்கியிருந்தார். 

முதலமைச்சர் தனது பதிலில் சத்தியலிங்கம் சுகாதார அமைச்சராக இருந்து பதவி விலகும்போது 750 அமைச்சு சார்ந்த கோவைகளை எடுத்து சென்றதாக அறிந்தேன். பின்னர் அந்த கோவைகள் மீள கொண்டுவந்து வைக்கப்பட்டதாகவும் அறிந்தேன்.

அதனடிப்படையிலேயே ஊடகங்களுக்கு கருத்து கூறியிருந்தேன். ஆனால் ஊடகங்கள் கோவையை சத்தியலிங்கம் எடுத்து சென்றார் என செய்தியை பிரசுரித்தன. கோவைகள் திரும்பி வந்துவிட்டன என செய்தியை பிரசுரிக்கவில் லை. ஆகவே ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து பேசிய பயனில்லை என்றார். 

இதனையடுத்து சபையில் கருத்து தெரிவித்த அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம் குற்றமற்றவர் அவர் மீது சபையில் எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் இல்லை என கூறினார். இதனையடுத்து கருத்து தெரிவித்த எதிர்கட்சி உறுப்பினர் வி.தவநாதன்,சத்தியலிங்கம் சுகாதார அமைச்சு சார்ந்த கோவைகளை எடுத்து சென்றதாக முதலமைச்சர் கூறினார். பின்னர் அந்த கோவைகள் திரும்பிவிட்டதாகவும் கூறினார். ஆகவே ஒரு அமைச்சு சார்ந்த கோவைகளை அமைச்சர் பதவி விலகும் போது எடுத்து செல்வது குற்றம் இல்லையா?
மேலும் சத்தியலிங்கம் குற்றமற்றவர் என்றால் மிகுதி 3 அமைச்சர்கள் குற்றவாளிகளா? சுற்றவாளிகளா? என கேள்வி எழுப்பினார். ஆனாலும் எதிர்கட்சி உறுப்பினர் வி.தவநாதனின் கேள்விக்கு இறுதிவரை சரியான பதில் கொடுக்க ப்படவில்லை. 

இறுதியாக கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் கூறுகையில் சுகாதார அமைச்சின் கோவைகள் எடுக்கப்படுவதாக முதலமைச்சருக்கு கூறியவள் என பேச தொடங்கி பின்னர் கூறியவர் என மாற்றிய சுகிர்தன் முதலமைச்சருக்கு கூறிய மண்டை கழண்டதை தெல்லிப்பழையில் சேர்க்கவேண்டும் என்றார்.

வுடமாகாண சுகாதார அமைச்சர் தனது சகோதரனை பினாமியாக கொண்டு மருத்துவ உபகரணக்கொள்வனவில் பாரிய மோசகளில் ஈடுபட்டது தெரிந்ததே.

No comments