புத்தளம் – கொழும்பு பாலாவி தல்கஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். பாலாவி சிங்கள வித்தியாலயத்தில் 6ஆம் தரத்தில் கல்வி கற்கும் டபிள்யூ.அசித்தசஞ்சீவ (12 வயது) என்ற சிறுவனே விபத்தில் உயிரிழந்துள்ளார். கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த சென்றுகொண்டிருந்த வாகனமே விபத்துக்குள்ளானது. எனத் தெரிவிக்கப்பட்டது. வாகனத்தைச் செலுத்திய சாரதிக்கு ஏற்பட்ட தூக்கத்தின் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் புத்தளம் ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பயனின்றி உயிரிழந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய வாகனசாரதி, விபத்தை ஏற்படுத்திவிட்டு அவ்விடத்தை விட்டுத் தப்பிச் செல்ல முற்பட்டுள்ள நிலையில், புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment