Header Ads

test

காரைநகர் இந்துக்கல்லூரி வளாகத்தை ஆக்கிரமிக்கும் கடற்படையினர்!!

காரை­ந­கர் இந்­துக் கல்­லூரி வளா­கத்­தில் கடற்­ப­டை­யி­ன­ரால் முகாம் அமைப்­பதை நிறுத்­து­மாறு பாட­சாலை நிர்­வா­கம் கோரிக்கை விடுத்­தும் கடற்­ப­டை­யி­னர் முகாம் அமைக்­கும் பணி­யைத் தொடர்ந்து மேற்கொண்டு வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

கடற்­ப­டை­யி­னர் முகாம் அமைக்­கும் நோக்­கு­டன் பாட­சா­லைக் காணியைப் புல்­டோ­சர் மூலம் துப்­பு­ரவு செய்­த­போது பாட­சாலை நிர்வாகம் காரை­ந­கர் பிர­தேச சபைத் தலை­வர், உப தலை­வர் ஆகியோரை அழைத்­துக்­கொண்டு சென்று இது பாட­சா­லைக்­கு­ரிய காணி இதில் முகாம் அமைப்­பதை நிறுத்­து­மாறு கோரிக்கை விடுத்­தது.

மறு­தி­னம் சாத­க­மான பதி­லைத் தரு­வ­தா­கக் கூறிய கடற்­ப­டை­யி­னர் இர­வோடு இர­வாக பாட­சா­லைக் காணி­யின் குறிப்­பிட்­ட­ளவு நிலப்­ப­ரப்­பி­னைக் கைய­கப்­ப­டுத்தி முட்­கம்பி வேலி அமைத்து முகாம் அமைக்­கும் பணி­யி­னைத் தொடர்ந்து முன்­னெ­டுத்­துள்­ள­னர்.

இத­னால் பாட­சாலை மாண­வர்­க­ளும் பெற்­றோர்­க­ளும் அச்­சத்­தில் உறைந்­தி­ருப்­ப­து­டன் பாட­சாலை வளா­கத்­தில் கடற்­படை முகாம் அமைப்­ப­தால் பாட­சா­லைக்­குப் பிள்­ளை­களை அனுப்­பு­வ­தற்­கும் பெற்றோர் அச்­சம் அடைந்­துள்­ள­னர்.

இது­வரை கால­மும் கல்­லூ­ரிக்கு சற்­றுத் தொலை­வில் இருந்த கடற்படை­யி­னர் தற்­போது பாட­சா­லைக் காணி­யில் முகாம் அமைப்­பது தொடர்­பாக நட­வ­டிக்கை எடுக்க அர­சி­யல்­வா­தி­கள் எவ­ரும் முன்­வ­ராமை குறித்து பாட­சாலை சமூ­கம் விச­னம் தெரி­வித்­துள்­ளது.

இந்­தப் பாட­சாலை அண்­மித்த பாட­சாலை சிறந்த பாட­சா­லைத் திட்டத்துக்­குத் தெரிவு செய்­யப்­பட்டு பாட­சா­லை­யின் அபி­வி­ருத்­திப் பணி­கள் முன்­னெ­டுப்­ப­தற்­காக பழைய மாண­வர்­க­ளால் பாட­சா­லை­யைச் சுற்­றி­யுள்ள காணி­கள் கொள்­வ­னவு செய்­யப்­பட்டு வழங்­கப்­பட்­டுள்­ள­து­டன் கட்­ட­டங்­கள் அமைக்­கும் பணி தொடங்க உள்ள நிலை­யில் கடற்படையி­னர் திடீ­ரென முகாம் அமைக்­கும் பணி­யினை மேற்கொள்வது குறித்­துப் பாட­சாலை சமூ­கம் அதி­ருப்தி அடைந்துள்ளது.

No comments