Header Ads

test

படமெடுக்க வருகின்றார் ரணில்!



வடபுலத்திற்கு படையெடுத்து வந்து படம் பிடித்துக்காட்டும் கொழும்பு அரசினது நாடகத்தின் ஓர் கட்டமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கு எதிர்வரும் 28ம் திகதி திங்கள் வருகை தரவுள்ளார்.அன்று காலை கிளிநொச்சிக்கு வருகை தருகின்ற இலங்கை பிரதமர் மதியம் யாழ்.நகரிலுள்ள முன்னணி ஹோட்டல் ஒன்றில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாணசபை அமைச்சர்கள்,உறுப்பினர்கள்,உள்ளுராட்சி தலைவர்களிற்கு மதிய விருந்துபசாரத்தை வழங்கவுள்ளார்.

அதனை தொடர்ந்து யாழ்.மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கூட்டமொன்றை இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டவுள்ளார்.

மீண்டும் வடக்கை முன்னிறுத்தி படையெடுத்து வந்து படம் காட்டும் நடவடிக்கைகளில் அமைச்சர்கள் பட்டாளம் களமிறங்கியுள்ளது.அதற்கென பல முகவர்கள் முன்னேற்பாடுகளிற்காக அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றனர்.


அண்மைக்காலமாக இலங்கை ஜனாதிபதியின் வருகைக்கு வடக்கில் மக்களது எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டுவருகின்ற நிலையில் தற்போது இலங்கை பிரதமர் ரணில் வருகை தரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments