Header Ads

test

நாடாளுமன்று இன்று கூடுகிறது ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ சர்ச்சையால் களோபரம் ஏற்படலாம்!


வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் கடந்த 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற “முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’’ நிகழ்வு தொடர்பிலும்இ இறுதிப்போர் குறித்து அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்ட கருத்துகள் தொடர்பாகவும்இ மகிந்த அணியான பொது எதிரணி நாடாளுமன்றத்தில் இன்று கேள்விக் கணைகளைத் தொடுக்கவுள்ளது. மே மாதத்துக்குரிய இரண்டாம் வார நாடாளுமன்றக் கூட்டத் தொடர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமாகின்றது. சபாநாயகர் அறிவிப்புஇ பொதுமனுத் தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று உட்பட தினப் பணிகள் முடிவடைந்த பின்னர்இ,பொது எதிரணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும்,, நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தனவால் கேள்விகள் எழுப்பப்படவுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது

No comments