Header Ads

test

வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!


வவுனியாவில் அரச பணியாளர் ஒருவரது இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மற்றும் சிலரது தூண்டுதலில் வவுனியா மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளரின் இடமாற்றத்தை உடனடியாக இரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 3மணியளவில் மாவட்ட விவசாயப்பணிமனையிலிருந்து பேரணி ஆரம்பமாகி மணிக்கூட்டு வீதி வழியாக புதிய பேருந்து நிலையம் சென்று அங்கு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.


இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராகவும் வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். வவுனியாவில் கடமையாற்றிய மாவட்ட விவசாயப்பணிப்பாளரை அண்மையில் மன்னார் மாவட்டத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டதற்கு எதிராகவே இன்றைய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. 

No comments