Header Ads

test

புதிய அரசியல் யாப்பு:பூச்சாண்டியுடன் மாவை!


தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சனைக்கு சமஸ்டி அடிப்படையிலான தீர்வை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் யாப்பை தயாரிக்கும் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் மீள ஆரம்பிக்கப்படும் என்று மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட இடைக்கால அறிக்கை நாட்டை பிளவுபடுத்தும் என்று தெற்கில் மஹிந்த அணியினர் பிரசாரப்படுத்திவரும் நிலையில், தமிழர் தாயகத்திலுள்ள சில தமிழ் கட்சிகள் இடைக்கால அறிக்கையால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்காது என்று பிரசாரம் செய்து வருவதாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாராசா குற்றம்சாட்டியுள்ளார்.


எனினும் புதிய அரசியல் யாப்பின் ஊடாக தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்று கிடைக்கும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் தெரிவிக்கும் மாவை சேனாதிராஜா அதனாலேயே அந்தப் பணிகளை மீண்டும் உடனடியாக ஆரம்பிக்குமாறு சிறீலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்திற்கு அழுத்தம்கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய மைத்திரி – ரணில் தலைமையிலான அரசுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து செயற்படுவதற்கான காரணத்தை தெளிவுபடுத்தியதுடன், அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள அதிருப்தி குறித்தும் தெளிவுபடுத்தினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி அவர்களும், ரணில் சொல்லியிருக்கின்றார்கள்.நடந்த முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலை அடுத்து ஸ்ரீலங்காவின் தேசிய அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளான சிறீPலங்கா சுதந்திரக் கட்சிக்கும் – ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலைகள் காரணமாக புதிய அரசியல் யாப்பை தயாரிக்கும் பணிகள் முடக்கப்பட்டுள்ளன.

எனினும் இந்தப் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் ஆரம்பிக்கப்படும் என்று தேசிய அரசாங்கத்தின் தலைவர்கள் இருவரும் தமக்கு உறுதியளித்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாராசா தெரிவிக்கின்றார்.

No comments