Header Ads

test

சுழிபுரம் காட்டுப்புலத்தில் முள்ளிவாய்க்கால் நடுகல்!


முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு சுழிபுரம் - காட்டுப்புலத்தில் நேற்று (18) வெள்ளிக்கிழமை அருள்தீபம் சனசமூக நிலையத் தலைவர் ஐங்கரன் தலைமையில் (18) நடைபெற்றது. 

இறுதி யுத்தத்தின்போது காட்டுப்புலம் மற்றும் பாண்டவெட்டையைச் சேர்ந்த பலர் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் நினைவாக அங்கு கடந்த 2010 ஆம் ஆண்டு நினைவுக்கல் ஒன்று நடுகை செய்யப்பட்டது. அந்த இடத்திலேயே நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. 

இந்த நிகழ்வில், வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான செ.கிருஸ்ணராசா, சி.இதயகுமாரன் ஆகியோரும் வெண்கரம் செயற்பாட்டாளர் மு.கோமகன் மற்றும் கல்விமான்கள், மாணவர்கள், பிரதேச மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

நடுகல்லின் முன்பாக ஒன்றுகூடிய அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தீபம் ஏற்றி அகவணக்கம் செலுத்தினர். பின்னர் நினைவுரைகளும் இடம்பெற்றன. 

No comments