துன்னாலை கிழக்குப் பகுதியில் பாழடைந்த வீடொன்றின் வெற்றுக் காணியில் இருந்து கைக்குண்டு ஒன்று இன்று அதிகாலை மீட்கப்பட்டது.
வீட்டில் எவரும் வசிக்காத நிலையில் அந்தப் பகுதியில் விறகு எடுக்கச் சென்ற நபர் ஒருவர் கைக்குண்டு இருப்பதை அவதானித்துப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார். இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் கைக்குண்டை மீட்டனர். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Post a Comment