Header Ads

test

யாழில் ஊடக சுதந்திர தினம்!

ஊடக சுதந்திர தினமான மே 03ம் திகதி ஊடகப்போராளிகளை நினைவுகூர்வதற்கான அழைப்பினை யாழ்.ஊடக அமையம் விடுத்துள்ளது.
நாளை வியாழக்கிழமை ஊடகப்படுகொலையான சக நண்பர்களை நினைவுகூரும் நிகழ்வு மறைந்த ஊடகவியலாளர்கள் நினைவு தூபி பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதனை தொடர்ந்து எங்களிற்காக எழுதிய அமரர் காமினி நவரட்ண (ஆசிரியர் சற்றர்டே ரிவூயூ),மற்றும் ஏ.ஜே.கனகரத்தினா(ஊடகவியலாளர்,சற்றர்டே ரிவூயூ ,சிரேஸ்ட விரிவுரையாளர்) அவர்களது நினைவேந்தல் பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
றக்காவீதி,யாழ்ப்பாணம் (ஊடக அமையத்திற்கு அருகாமை)யில் அமைந்துள்ள ஆர்ட் கலரியில் நடைபெறவுள்ள நினைவேந்தலில், நினைவு உரைகளை
காமினி நவரட்ண பற்றிய புரிதல்
திரு.ஜ.சாந்தன், மூத்த எழுத்தாளர்.
காமினி நவரட்ணவின் காலம்
திரு.ந.பரமேஸ்வரன்,மூத்த ஊடகவியலாளர்,யாழ்ப்பாணம்
ஏ.ஜே.கனகரத்தினா காலத்தால் நிலைத்தவர்.
பேராசிரியர் .இ.சிவச்சந்திரன் (ஓய்வுநிலை –யாழ்.பல்கலைக்கழகம்)
முன்னணி சமூக செயற்பாட்டாளர்
ஏ.ஜே பற்றிய தெற்கின் அறிதல்
திரு.விமல்சுவாமிநாதன்,சிரேஸ்ட விரிவுரையாளர்,மொழியியல்துறை,யாழ்.பல்கலைக்கழகம்
ஆகியோர் ஆற்றவுள்ளனர்.

No comments