Header Ads

test

இலங்கை- சீனா இடையிலான பேச்சுக்களில் தடங்கல்!

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுக்களில், தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்துள்ளது. இலங்கையில் போட் சிட்டி உட்பட்ட பாரிய வேலைத்திட்டங்களை சீனா ஏற்கனவே முன்னெடுத்து வருகிறது.எனினும், இந்த முதலீடுகள் மற்றும் கடன்கள் இலங்கையின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற சந்தேகங்கள் அண்மைக்காலமாக எழுப்பப்பட்டு வருகின்றன.

  
இந்தநிலையில் சுதந்திர வர்த்தக உடன்பாடு 10 வருடங்களில் மீளமைக்கப்பட வேண்டும் என்று இலங்கை சார்பில் கோரப்பட்டுள்ளது. எனினும் அதற்கு சீனா மறுத்து விட்டதாக பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் முக்கியஸ்தரான கேஜே வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்த நிலையில் குறித்த பேச்சுவார்த்தையில் சிறிய முன்னேற்றமே ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த தடங்கல் நிலை குறித்து சீனா எவ்வித கருத்துக்களையும் இதுவரை வெளியிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments