Header Ads

test

சரணடைந்தவர்களது பெயரை வெளியிடும் யஸ்மின் சூக்கா!


இறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் உறவுகளிடம் இன்று உரையாடிய ஐ.நா விசாரணை அதிகாரி யஸ்மின் சூக்கா அம்மையார், இராணுவத்திடம் சரணடைந்து காணாமலாக்கப்பட்டுள்ள 280 பேரின விபரங்களை எதிர்வரும் மே 18 அன்று வெளியிடுவதாக உறுதியளித்துள்ளார்.

நேற்றைய தினம் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பத்தவர்களுடன் அவர் காணொளி மூலம் உரையாடியிருந்தார். அவ்வகையில் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களில் ஆதாரபூர்வமானவற்றில் ஒரு பகுதியை வெளியிட அவர் சம்மதித்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் சிலரது ஏற்பாட்டினில் அவர் இந்த காணொலி உரையாடலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments