சிங்கப்புர் வர்த்தக உடன்படிக்கை மற்றும் எட்கா உடன்படிக்கை என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச வைத்தியசாலைகளில் நாளை (17) நாடு தழுவிய வேலைநிறுத்தமொன்றை முன்னெடுக்கப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காலை 8.00 மணி முதல் மறுநாள் (18) காலை 8.00 மணி வரையில் அமுல்படுத்தப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் தமது கோரிக்கைக்கு செவிசாய்க்காது போனால், நாடு தழுவிய தொடர் வேலைநிறுத்தமொன்றை முன்வைக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Post a Comment