பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சபை அமர்வு நிகழ்வுகள் கால வீணடிப்பும், பொது மக்களின் சொத்தை விரயமாக்கும் ஒரு நடவடிக்கையும் ஆகும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிம்மல் ரத்னாயக்க தெரிவித்தார். இதற்கான அரசாங்கம் செய்துள்ள செலவு விபரத்தை வெளியிடுமாறும் அவர் சபாநாயகரிடம் நேற்று வேண்டுகோள் விடுத்தார். ஜனாதிபதி நேற்று தனதுரையில் காத்திரமான செயற்பாட்டு ரீதியிலான அறிக்கைகள் எதனையும் முன்வைக்கவில்லை. நேற்றைய சபை அமர்வு ஒரு வீணான நடவடிக்கையே அன்றி வேறில்லை. தனது கட்சிக்குள் உள்ள முரண்பாட்டைச் சமாளிப்பதற்கே ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார் எனவும் அவர் மேலும் குற்றம்சாட்டினார்.
Post a Comment