ஆர்ஜெண்டினாவை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரேஷியா
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் டி பிரிவில் இடம் பிடித்துள்ள அர்ஜெண்டினா மற்றும் குரேஷியா அணிகள் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. போட்டி தொடங்கியதில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர்.
இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் குரேஷியா வீரர்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணியின் வீரர்கள் அடுத்தடுத்த இடைவேளையில் கோல் அடித்து தங்கள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
குரேஷியா அணியின் அண்டி ரெபிக் 53-வது நிமிடத்திலும், லூக்கா மாட்ரிக் 80-வது நிமிடத்திலும், இவான் ராகிடிக் 91வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்தனர்.
குரேஷியா வீரர்களின் ஆக்ரோஷ ஆட்டத்துக்கு முன் அர்ஜெண்டினா வீரர்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனால் போட்டியின் இறுதியில், குரேஷியா அணி அர்ஜெண்டினா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Post a Comment