போர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது!
ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. போர்ச்சுக்கல் வீரர் கார்னரில் இருந்து பந்தை அடிக்காமல், மற்றொரு வீரருக்கு பாஸ் செய்தார்.
அவர் பந்தை கோல் எல்லையை நோக்கி அடித்தார். அந்த பந்தை கிறிஸ்டியானோ ரொனால்டோ தலையால் முட்டி அபாரமாக கோல் அடித்தார். இந்த கோலிற்கு பதில் கோல் அடிக்க மொராக்கோ அணி முயற்சிகள் மேற்கொண்டனர்.
ஆனால் போர்ச்சுக்கல் வீரர்கள் கோல் அடிப்பதைவிட தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினார்கள். மொராக்கோ வீரர்கள் பலமுறை பந்தை கோல்நோக்கி எடுத்துச் சென்றனர். ஆனால், போர்ச்சுக்கலின் தடுப்பாட்ட வியூகத்தை அவர்களால் முறியடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் முடியும்வரை கோல் அடிக்க இயலவில்லை. ஆகவே, போர்ச்சுக்கல் 1-0 என வெற்றி பெற்றது.

Post a Comment