சீனாவில் நாய் இறைச்சித் திருவிழா! 10 ஆயிரம் நாய்கள் பலியிடத் தயார்!
சீனாவில் குவாங்சி மாகாணத்தில் யூலினிக் என்ற இடத்தில் நாய் இறைச்சி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வருகிற 21-ந் தேதி இத்திருவிழா நடக்கிறது.
இந்த திருவிழா சுமார் ஒரு வாரம் நடைபெறும். சீனர்களை பொறுத்தவரை நாய் இறைச்சி உடலுக்கு குளிச்சி தரும் என நம்புகின்றனர். அதற்காக கோடை காலங்களில் திருவிழாவாக நடத்தி நாய் இறைச்சியை சாப்பிடுகின்றனர்.
எனவே இந்த திருவிழாவில் பலியிட 10 ஆயிரம் நாய்கள் தயாராக உள்ளன. இதற்காக நாய்கள் பெருமளவில் திருடப்பட்டு யூலின் நகருக்கு கூண்டுகளில் அடைத்து கொண்டு வரப்பட்டுள்ளன.
திருவிழாவில் நாய்கள் வெட்டப்பட்டு அல்லது உயிருடன் தீயில் வாட்டப்பட்டு இறைச்சியாக வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படுகிறது. நாய்கள் மட்டுமின்றி பூனை கறியும் இங்கு விற்பனையாகிறது.
அதற்கு தடை விதிக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் சமூக வலை தளங்களில் பிரசாரம் நடத்தி வருகின்றனர். ஆனால் சீனர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் நாய்கறி திருவிழாவுக்கு தயாராகி வருகின்றனர்.

Post a Comment